சினிமாவெள்ளித்திரை

ஐஸ்வர்யா ராய் மீது பொறாமை – நடிகை மீனா!

பொன்னியின் செல்வன்

கல்கியின் புகழ்பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் முதல் பாகம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.

டவிட்டர் பதிவு 

இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படம் குறித்து நடிகை மீனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘இனிமேலும் என்னால் இதை ரகசியமாக வைத்துக்கொள்ள முடியாது. இதை நான் சொல்லியே ஆக வேண்டும். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் மீது முதல்முறையாக பொறாமை கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts