நவம்பர் 6ம் தேதி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணிக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற முறையீடு
பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இதனால் சட்ட ஓழுங்கு பிரச்சனை காரணமாக அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் மற்றும் பேரணிக்கு தமிழக காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல் ஆர்எஸ்எஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் அறிவித்த பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், இதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது.
நீதிமன்ற உத்தரவு
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணிக்கு அக்டோபர் 2-ம் தேதிக்கு பதில் நவம்பர் 6-ம் தேதி அன்று அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு அக்டோபர் 31-ம் தேதிக்குள் காவல்துறை அனுமதி வழங்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

