சினிமாதமிழ்நாடு

இயக்குனர் பாரதிராஜாவுடன், ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு!

இயக்குனர் பாரதிராஜாவை அவரது நீலாங்கரை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்துள்ளார்.

திடீர் சந்திப்பு

1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. அதனைத்தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை ஆகிய படங்களை இயக்கி பிரபலமானார். இதனிடையே அண்மையில் இயக்குனர் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்பட்டார். அதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சென்னை, நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து அவரின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

Related posts