சினிமாவெள்ளித்திரை

வசூல் சாதனையில் தனுஷ் படம் : மகிழ்ச்சியில் படக்குழு!

தனுஷ் படம்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’ நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில், யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

படக்குழு மகிழ்ச்சி 

இந்நிலையில், ‘நானே வருவேன்’ திரைப்படம் வெளியான முதல் நாளான நேற்று மட்டுமே சுமார் ரூ.10.1 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இயக்குனர் செல்வராகவனுக்கு மாலை அணிவித்து பாராட்டியுள்ளார்.

Related posts