அரசியல்இந்தியா

ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட பிரதமர் மோடியின் கார்!

இரண்டு நாள் பயணம் 

பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலத்திற்கு சென்று ஆமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று காந்திநகர் மற்றும் மும்பை சென்ட்ரல் இடையேயான புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைப்பதற்காக ஆமதாபத்தில் இருந்து காந்தி நகருக்கு சென்றுக்கொண்டிருந்தார்.

ஆம்புலன்ஸ்

அப்போது அந்த சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று அவசரமாக வருவதை பார்த்து உடனடியாக தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறி தன்னுடைய வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related posts