சமூகம்தமிழ்நாடு

வரும் 9-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்- கலெக்டர் அதிரடி உத்தரவு!

வருகிற 2-ம் தேதி காந்திஜெயந்தியும், வரும் 9-ம் தேதி அன்று மிலாடி நபியும் கொண்டாடப்படவுள்ளது.

டாஸ்மாக்

இதனையொட்டி காஞ்சிபுர மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வருகிற அக்டோபர் 2-ந் தேதி (ஞாயிற்று கிழமை), காந்திஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதேபோல் வருகிற 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாடி நபி கொண்டாடப்படவுள்ளது. இதனால் குறிப்பிட்ட அந்த இரண்டு நாட்களும் காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுபானக்கூடங்கள், அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts