சினிமாவெள்ளித்திரை

தேசிய விருது பெற்ற சூர்யா – ஜோதிகா தம்பதியினர்!

தேசிய விருது

திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதில் சூர்யா தயாரித்து நடித்த சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2020-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் சூர்யா, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

மேலும், சூரரை போற்று படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான விருதை தயாரிப்பாளர் ஜோதிகா பெற்றுக் கொண்டார்.

Related posts