அரசியல்சமூகம்சினிமாவெள்ளித்திரை

இசையமைத்த பாடலை திரும்ப பெற்றதில்லை; அதுபோல சொன்ன கருத்தையும் திரும்ப பெறப்போவதில்லை – இளையராஜா!

“இசையமைத்த பாடலை திரும்ப பெற்றதில்லை. அதுபோல சொன்ன கருத்தையும் திரும்ப பெறப்போவதில்லை”  -இளையராஜா!

ஒப்பீடு

சில தினங்களுக்கு முன் அம்பேத்கர் அண்ட் மோடி புத்தகத்தின் முன்னுரை பகுதியில் இசைஞானி இளையராஜா அவர்கள் சட்டமேதை அம்பேத்கரையும், இந்திய பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு எழுதி இருந்தார். அதில், “மோடி இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார் என்றும் பெண்களின் மேம்பாட்டுக்கு செயல்படுகிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியின் செயல்பாட்டை கண்டு பெருமிதம் கொள்வார். மேலும், அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து மிக பெரிய கனவு கண்டவர்கள்” என்று குறிப்பிட்டுயிருந்தார்.

இளையராஜா – அரசியல்

இந்த ஒப்பீடு மிக பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. இளையராஜாவின் தீவிர ரசிகர்கள் என்று சொல்லிகொள்ளும் அத்தனை பேரும் இளையராஜாவிற்கு எதிராக திரும்பினார். இதைப்பற்றி  பல அரசியல் விவாதங்களும் நடைபெற்றது. இதுகுறித்து இளையராஜா வெளிட்ட அறிக்கையில், இது என்னுடையே சொந்த கருத்து என்றும் இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.


கருத்தை திரும்ப பெறப்போவதில்லை

இன்னும் இந்த சர்ச்சை அணைந்தப் பாடில்லை. இசைஞானின் தம்பியும், பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன் நேற்று இளையராஜாவிடம் இதுகுறித்து பேசியபோது,

“மற்றவர்கள் கருத்து கூறியதுபோல்தான் நானும் கருத்து கூறினேன். என் கருத்துக்கு வரும் எதிர் விமர்சனங்களை அவர்களின் கருத்து என்றே பார்க்கிறேன். அவை எதுவும் என்னை  பாதிக்கப்போவதுதில்லை. என் எண்ணத்தில் இருந்த மோடி பேச்சிலும் வந்தார். நான் பதவிக்காக அவரை புகழவில்லை” என்றும் இளையராஜா கூறியுள்ளார்.

மேலும், “என்னுடையே பாடல்களை பலர் விரும்புவர்; சிலர் வெறுப்பர். அதைபோல் தான் இதையும் பார்க்கிறேன்.  நான் படங்களுக்கு இசையமைக்கும் பாடல்களை திரும்ப பெறுவதில்லை. அதைபோல் என்னுடைய கருத்துகளையும் திரும்ப பெறப்போவதில்லை. எனக்கு என் கருத்தை சொல்ல சுதந்திரம் உண்டு. இதற்காக ஒவ்வொருவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது” என்று இளையராஜா உறுதியாக கூறியுள்ளார். இதை கங்கை அமரன் தெரிவித்தார்.

Related posts