உலகம்

கொரியாவில் வயதை கணிக்கும் வித்தியாசமான முறைகள் -இப்படிலாம் இருக்குமா!

உங்களுக்கு எத்தனை வயசு? இந்தியாவில் மிகவும் எளிதாக பதிலளிக்க கூடிய கேள்வி இது. ஆனால், கொரியாவில் அப்படிக் கிடையாது. அவர்கள் தங்கள் வயதை கணிக்கும் முறை மிகவும் சுவாரசியமானதாக உள்ளது.

ஏன் என்கிறீர்களா? கொரியாவில் வயதை கணிப்பதற்கு மூன்று முறைகளை பயன்படுத்துகிறார்கள்.

கொரியாவில் 1962ஆம் ஆண்டிலிருந்து பெரும்பாலான சட்ட வரையறைகள் மற்றும் நிர்வாக செயல்முறைகளில், பிறந்த தேதியைப் பயன்படுத்தி எல்லா நாடுகளிலும் கணிப்பது போலவே வயது கணிக்கப்படுகிறது.

கொரியாவில் வயதைக் கணக்கிடுவதற்கான மற்றொரு அதிகாரப்பூர்வ வழியும் உள்ளது. பிறந்த குழந்தைக்கு ஒவ்வொரு ஜனவரி 1 ஆம் தேதியும் ஒரு வயது என்று கணக்கிடப்படுகிறது.

இதன்படி, டிசம்பர் 2020 இல் பிறந்த குழந்தைக்கு 2022 ஜனவரிக்குள் இரண்டு வயது இருக்கும். 2022 டிசம்பரில் தான் இரண்டு வயது முழுமையடையும் என்ற போதும் ஜனவரி மாதமே இரண்டு வயது என்று கணித்து விடுவார்கள்.

வயதை கணிக்கும் “கொரியன் ஏஜ்” என்ற பாரம்பரிய முறையும் கொரியாவில் உள்ளது. இது அங்குள்ள அனைவராலும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில்  ஒவ்வொரு குழந்தைக்கும் பிறந்த உடனேயே வயது ஒன்று என கணக்கிடப்படுகிறது. மேலும் புத்தாண்டு தினத்தில் அவர்களின் பிறந்த தேதியைப் பொருட்படுத்தாமல் ஒரு வயது முடிந்து இரண்டு வயதை தொடுகிறார்கள்.

இந்த முறைகளின் கீழ், மெகா கே-பாப் இசைக்குழு BTS இன் Kim Tae-hyung aka V, 30 டிசம்பர் 1995 இல் பிறந்தார், அவருக்கு 28 வயது (கொரிய வயது), 26 வயது (சர்வதேச வயது) அல்லது 27 வயது (மற்றொரு கொரிய அதிகாரப்பூர்வ வயது) .

இவ்வாறு கொரியாவில் தங்கள் வயதை மூன்று விதமாக கணக்கிடுகிறார்கள்.

Related posts