Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

3 நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே போரை நிறுத்துவோம்! ஈரான் உறுதி!

March 12, 2026

அமலாக்க துறை மனுவுக்கு பதிலளிக்க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவு

March 12, 2026

‘ஜெயிலர் 2’ அப்டேட்: ஷாரூக்கான் காட்சிகள் படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்

March 12, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, March 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»வணிகம்»ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு கடைகளுக்கு பாதிப்பா ? – ஒரு சிறிய ரிப்போர்ட்

ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு கடைகளுக்கு பாதிப்பா ? – ஒரு சிறிய ரிப்போர்ட்

April 20, 20223 Mins Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் கொடுக்கின்ற வரைமுறையற்ற ஆபர்களினால் வர்த்தகத்தில் இருக்கவேண்டிய இயல்பான போட்டி என்பது காணாமல் போய்விட்டது . இதனால் சிறு சிறு கடைகள் வைத்திருப்போர் வியாபாரத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .

ஆன்லைன் வர்த்தகம் :

ஆன்லைன் வர்த்தகம் இரண்டு விதங்களில் நடக்கலாம் . ஒன்று பொருளினை தயாரிப்பவரே இணையதளத்தின் மூலமாக விற்பனை செய்வது . இரண்டாவது பொருளினை தயாரிப்பவர் மற்றும் வாங்குவோருக்கு இடையே இடைத்தரகர் ஒருவர் நுழைந்து அவரது இணையதளத்தின் மூலமாக வாங்கிடுவது . தற்போது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்றவை செயல்படுவது இரண்டாவது முறைப்படிதான் .

 

Unconditional Offers :

அமேசான் தற்போது Great Indian Festival எனவும் பிளிப்கார்ட் The BIG billion days எனவும் ஆபர்களை வழங்கி வருகின்றன . ஆபர் என்றால் சாதாரண ஆபர் இல்லை மிகப்பெரிய ஆபர் . குறிப்பிட்ட வங்கியின் ATM கார்டை பயன்படுத்தினால் இத்தனை சதவிகிதம் என ஆரம்பித்து , பொருளுக்கான விலையில் தள்ளுபடி , வட்டியில்லாத EMI , Exchange ஆபர் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது .

அதிகப்படியாக ஆபர்கள் கொடுப்பதனால் சாதாரண மக்களுக்கு குறைந்த விலையில் பொருள் கிடைக்கின்றதே இதனை எப்படி தவறாக கூற முடியும் . இயல்பாக நம் மனதில் எழக்கூடிய கேள்வி இது. இதற்கான பதிலை தற்போது பார்க்கலாம் . நேரடியாக அணுகினால் இப்படித்தான் தோன்றும் ஆனால் கூர்ந்து கவனித்தால் இதானால் ஏற்படும் அபாயங்களை நம்மால் அறிய முடியும்.

இதையும் படிக்க :  நூறாண்டுகள் கடந்தும் குறையாத மவுசு - மிதிவண்டியின் வணிக வரலாறு ஒரு சிறு தொகுப்பு

வாங்கும் பழக்கம் அதிகரிக்கும் :

ருவருடைய பொருளாதாரம் அதிகரிக்க அவருடைய வருமானம் அதிகரித்து சேமிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டுமே அன்றி வாங்கும் பழக்கம் அதிகரிக்க கூடாது . தற்போது வழங்கப்படுகின்ற ஆபர்களினால் தேவைக்கு அதிகமாக நாம் பொருள்களை வாங்கி குவித்துக்கொண்டு இருக்கின்றோம் . இரண்டு வருடங்கள் வைத்திருக்கலாம் என்றாலும் இரண்டு மாதத்தில் புதிய மொபைல் வாங்கிடும் நிலைக்கு நாம் பழக்கப்படுத்தப்பட்டு விட்டோம் .

மற்ற நிறுவனங்களை முடக்கும் :

அமேசான், பிளிப்கார்ட் அதிகப்படியான ஆபர்களை வழங்கி வருகின்றது . இதனால் மக்கள் நேரடியாக கடைக்குச்சென்று வாங்குவதை தவிர்த்துவிட்டு அமேசான் அல்லது பிளிப்கார்ட்டில் பொருள்கள் வாங்கிக்கொள்கின்றனர் . இதனால் பல கடைக்காரர்களின் அன்றாட வியாபாரம் கூட நடைபெறாமல் அவர்கள் கடைகளை மூடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .

இதற்கு மக்கள் என்ன செய்ய முடியும்? குறைந்த விலை இருக்கும் இடத்தில் தானே வாங்குவார்கள் ? உண்மைதான் . ஆனால் குறிப்பிட்ட ஒரு பொருளை அதிகப்படியான தள்ளுபடிக்கு விற்று அதனால் மற்றொரு நிறுவனத்தின் விற்பனையை பாதித்தால் அது குற்றம் . அடிப்படை விலையை விட குறைவாக விற்க கூடாது . இதற்காக புகாரும் அளிக்கலாம் . ஆனால் இந்த விதி ஆன்லைன் வர்த்தகத்திற்கு இல்லை ஆகையால் தான் வாடிக்கையாளர்களை பிடித்தால் போதும் மற்ற நிறுவனங்களை மூடினால் போதும் என்ற ரீதியில் தங்களுடைய சொந்த பணத்தை ஆபர் என்ற பெயரில் வழங்கி அதிரடி காட்டுகின்றன அமேசான் பிளிப்கார்ட் போன்றவை .

இதையும் படிக்க :  தங்கம் விலை தொடர்ந்து சரிவு!

இதனால் கடைகள் வைத்திருப்போர் நிச்சயமாக அமேசான் போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்திருக்க வேண்டும் அல்லது கடைகளை மூடிவிட்டு செல்ல வேண்டும் என்ற சூழல் உருவாகியிருக்கின்றது .அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இரண்டுமே வெளிநாட்டினரால் நிர்வகிக்கப்படுகிறது . ஒருவேளை இந்த இரண்டு நிறுவனங்களும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஜாம்பவான்களாக தொடர்ந்தால் சிறு வணிகர்களின் நிலை அதோகதி தான்.

நாம் பொருள்களை வாங்குவதினால் கிடைக்கப்போகும் முழு லாபத்தையும் இவைகளே குவித்துக்கொள்ளும் . பலநபர்களுக்கு வேலை அளித்துக்கொண்டு இருக்கக்கூடிய நமது ஊரை சேர்ந்த முதலாளிகளை முடக்கிவிட்டு இவர்கள் பெரும் முதலாளியாக மாற போகிறார்கள்.

Digitally Generated Image of Shopping Concept

தீர்வு தான் என்ன ? 

ஒரு பொருளை MRP க்கு அதிகமாக விற்பது எப்படி வாடிக்கையாளர்களுக்கு செய்யும் குற்றமோ அதனைபோலவே ஒரு பொருளை அடிப்படை விலையை காட்டிலும் குறைவானதாக விற்பது சக வணிகர்களுக்கு செய்யும் குற்றம் .
தன் சொந்தபணத்தை முதலீடாக கொண்டு ஆபர் என கொடுத்து மற்ற போட்டியாளர்களை அழித்திடும் செயலை இனியும் கண்டுகொண்டிருக்க கூடாது . ஒரு பொருள் ஆன்லைன் அல்லது இணையம் இரண்டிலும் அதிகபட்சமாக மற்றும் குறைந்தபட்சமாக எவ்வளவுக்கு விற்கப்படவேண்டும் என்பதனை அரசு சட்டமியற்றி வழிமுறை படுத்திட வேண்டும் .

இதனை வரைமுறைப்படுத்தாவிடில் இன்னும் சில ஆண்டுகளில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்றவை மட்டுமே இருக்கும் .

Amazon business E-commerce economics Flipkart
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகொரியாவில் வயதை கணிக்கும் வித்தியாசமான முறைகள் -இப்படிலாம் இருக்குமா!
Next Article இந்தியாவில் மீண்டும் பரவ தொடங்கும் XE வகை கொரோனா.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என சுகாதாரத் துறை செயலாளர் வலியுறுத்தல்!

Related Posts

தமிழ்நாடு

இன்று நகை வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்.. ஒரே நாளில் அதிரடி சரிவு

March 12, 2026
தமிழ்நாடு

தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய சந்தை நிலவரம் என்ன?

March 11, 2026
இந்தியா

பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.31 லட்சம் கோடி இழப்பு

March 10, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,352 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,352 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Our Picks

3 நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே போரை நிறுத்துவோம்! ஈரான் உறுதி!

March 12, 2026

அமலாக்க துறை மனுவுக்கு பதிலளிக்க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவு

March 12, 2026

‘ஜெயிலர் 2’ அப்டேட்: ஷாரூக்கான் காட்சிகள் படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்

March 12, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.