வடகொரியாவில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்தியாவில் கொரோனா
கடந்த 2019ம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது கொரோனா தொற்று. இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமானதை தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா 2வது அலை காரணமாக கடந்த வருடம் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டது. இதனிடையே ஒமைக்ரான் என்ற புதிய வகை தொற்றும் பரவ தொடங்கியது.
பில் கேட்ஸ் பாராட்டு
இதனிடையே உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் கோவிட் பெருந்தொற்று குறித்துப் பேசியிருந்தார். அதில் இந்தியா குறித்து பேசிய அவர், தொலைத்தொடர்பு கூட இல்லாத பல கிராமங்களைக் கொண்ட நாடு இந்தியா. அனால் இந்தியா கோவிட் பெருந்தொற்றை சிறப்பாகக் கையாண்டது என்றும் ஆதார் அட்டையை பயன்படுத்தி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை கொண்டு சேர்த்தது பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.
வடகொரியாவில் ஒமைக்ரான்
இந்நிலையில், வடகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்று பெருமைப்பட்டு வந்தது அந்த நாட்டு அரசு. அனால் தற்போது முதல்முறையாக வடகொரியாவில் ஒருவருக்கு தொற்று உருதியாகியுள்ளது. மேலும், அது உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வகை தொற்று என்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நகரங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார்.
அதிபர் பேச்சு
இது குறித்து பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது. நமது நாட்டில் கொரோனா தொற்று சத்தமில்லாமல் நுழைந்துவிட்டது. இதனால் நாடு முழுவதும் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. இதன்மூலம் குறுகிய காலத்துக்குள் கொரோனா தொற்றின் வேரை அகற்றுவதே நமது குறிக்கோள். மேலும், இந்த அவசர நிலையை சமாளிக்க மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உறுதிமொழி எடுக்க வேண்டும். என்று அந்த நாட்டு மக்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் கூறினார்.