தமிழ்நாடு

ஆம்பூரில் பிரியாணி திருவிழா – மாட்டு இறைச்சி பிரியாணிக்கு தடை !

ஆம்பூரில் நாளை நடக்கும் பிரியாணி திருவிழாவில் மாட்டு இறைச்சி பிரியாணியை சேர்க்க கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் உள்ள வர்த்தக மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக நாளை தொடங்கி மூன்று நாட்களுக்கு பிரியாணி திருவிழா நடைபெறும். இதனை மாவட்ட ஆட்சியர் அமர்குஸ்வஹா தலைமை தாங்கி தொடங்கி வைக்கின்றார்.

 

பிரியாணி திருவிழா

பிரியாணி என்றாலே அது பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணும் உணவாக மாறிவிட்டது. பல ஊர்கலில் பல விதமான பிரியாணி பெயர்களை நாம் சமீப காலமாக கேட்டு வருகிறோம். அந்த வகையில் ஆம்பூர் பிரியாணிக்கு என்று தனி மவுசு உள்ளது.
ஆம்பூரில் நாளை தொடங்கி 15 தேதி வரை பிரியாணி திருவிழா அறிவிக்கப்பட்டு உள்ளது.

பீப் பிரியாணிக்கு தடை

இதில் மாட்டு இறைச்சிக்கு தடை என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. குறிப்பாக கோழி, முட்டை, ஆடு ஆகிய இறைச்சிக்கு மட்டுமே அனுமதி என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருப்பது பிரியாணி பிரியர்களிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாட்டு இறைச்சியை பிரியாணி திருவிழாவில் சேர்க்க வேண்டுமென ஒரு தரப்பினர் போராடி வருகின்றனர். பிரபலான மக்கள் விரும்பி உண்ணக்கூடிய மாட்டு இறைச்சியை பிரியாணி திருவிழாவில் இணைக்க வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாக உள்ளது.

கட்சிகள் அறிக்கை

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் நிர்வாகம் ஆம்பூரில் நடத்தும் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி சேர்க்காவிட்டால் இலவசமாக வழங்வோம் என விசிக, மமக, எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் அறிவித்துள்ளன. விழா நடைபெறும் வளாகம் முன் கடைகள் அமைத்து இலவசமாக வழங்வோம்.
தற்போது ஆம்பூர் வர்த்தக மையத்தில் ஆம்பூர் பிரியாணி திருவிழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் அமர்குஸ்வஹா ஆய்வு செய்துள்ளார்.அவருடன் சில துறை சார்ந்த பொறுப்பாளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Related posts