சமூகம்சினிமா

19 வயது பெண்ணுக்கு டார்ச்சர் – நடிகை மும்தாஜ் மீது பாயும் குழந்தை தொழிலாளி தடுப்பு சட்டம்!

நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்து வந்த 19 வயது இளம்பெண்ணை மிரட்டியதாகவும், துன்புறுத்தியதாகவும் அந்த இளம்பெண் போலீஸில் புகாரளித்துள்ளார்.

நடிகை மும்தாஜ்

இயக்குனர் டி. ராஜேந்தர் இயக்கிய ‘மோனிஷா என் மோனாலிசா’ என்ற படம் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் தான் மும்தாஜ். அதை தொடர்ந்து பல தமிழ் திரை படங்களிலும் நடித்துள்ளார் மும்தாஜ். ஒரு காலகட்டத்தில் பல இளைஞர்களின் கனவு தேவைதையாக வலம் வந்தவர் மும்தாஜ்.


குறிப்பாக ‘மல மல மல மருதமலை’ ‘லக்சு பாப்பா லக்சு பாப்பா’ என்ற பாடல்கள் மூலம் இளைஞர்களின் மனதில் நிரந்திர இடம் பிடித்தார் மும்தாஜ். மும்தாஜ் தமிழ் மட்டுமின்றி பிறமொழி படங்களிலும் நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால் சில வருடங்களிலேயே மும்தாஜ் சினிமாவை விட்டு சற்று விலகி போனார். அதன்பின் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் கெஸ்ட் ரோல்களில் தோன்றினார்.

பிக்பாஸ் மும்தாஜ்

பிற மொழிகளில் பிரபலமானா பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழும் நடத்த டிஸ்னி ஹாட் ஸ்டார் முடிவு செய்தது. அதன் படி கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் கொடுத்த பேராதரவை தொடர்ந்து பிக் பாஸின் சீசன் 2 கடந்த 2018ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது.


அதில் மும்தாஜ் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த சீசனில் மும்தாஜ் கலவையான விமர்சனங்களை பெற்றார். ஆனாலும் மும்தாஜ் மீண்டும் தமிழ் மக்கள் இடையே பிரபலமானார்.

19 வயது இளம்பெண் டார்ச்சர்

இந்நிலையில், மும்தாஜ் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவர் வீட்டில் வேலை செய்து வந்த 19 வயது பணிப்பெண் அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு தொலைப்பேசியில் கொண்டுள்ளார். அவர், மும்தாஜ் தன்னையும் தனது 17 வயது தங்கையையும் மிரட்டுவதாகவும், துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அண்ணாநகர் காவல்துறையினர் நேரில் சென்று விசாரித்த போது அந்த இரண்டு பெண்களும் உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் சுமார் 6 வருடங்களாக நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மும்தாஜின் வீட்டிற்கு அருகே வேறொரு வீட்டிற்கு வேலை கேட்டு சென்றதால் மும்தாஜ் தன்னையும் தன் தங்கையையும் மிரட்டுகிறார் என்று கூறியுள்ளார்.

குழந்தை தொழிலாளி தடுப்பு சட்டம்

அண்ணா நகர் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும், 6 வருடத்திற்கு முன் அந்த இரண்டு பெண்களும் மும்தாஜ் வீட்டிற்கு வேலைக்கு சேர்க்கபட்டதால், குழந்தை தொழிலாளி தடுப்பு சட்டபிரிவிலும் மும்தாஜ் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

இதுவரை மும்தாஜ் தரப்பில் இருந்து எந்த தகவல்களும் வெளி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts