சினிமாவெள்ளித்திரை

இணையத்தை கலக்கும் விஜய் பட புதிய போஸ்டர்!

புதிய போஸ்டர்

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். இதில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதனிடையே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற நாளை நடைபெறவுள்ளது. இதற்கான மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை இசையமைப்பாளர் தமன் நேரில் சென்று பார்வையிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், வாரிசு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது கவனம் பெற்று வருகிறது.

Related posts