வெற்றி கிடைக்கும்போது கொண்டாடிவிட வேண்டும் என்று விருமன் பட விழாவில் நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
வெற்றி விழா
முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் விருமன். இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. திரையரங்கில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில், விருமன் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.
கார்த்தி பேச்சு
நடிகர் கார்த்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், முத்தையா கண்ணீருடன் தான் கதையே சொல்வார். மேலும், இந்த படம் கிராமத்தில் வெற்றி பெறும். நகரத்தில் சந்தேகம்தான் என்றார்கள். ஆனால், நகரத்தில் எனக்கே படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை’ என்று கார்த்தி கூறியுள்ளார்.

