வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் கொண்டாடுங்கள் என புன்னகையுடன் சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி கூறியுள்ளார்.
நடிகை சைத்ரா ரெட்டி
தமிழில் தனது முதல் சீரியலில் வில்லியாக நடித்த சைத்ரா ரெட்டி தற்போது கயல் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். தமிழில் வெளியான ‘யாரடி நீ மோகினி’ என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். முதல் சீரியலிலேயே வில்லி ரோலில் நடித்தாலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சைத்ரா பெங்களூருவில் தனது கல்லூரியில் படித்துள்ளார். பின்னர் அங்கு ‘அவனு மேட்டே ஷ்ரவாணி’ என்ற கன்னட சீரியல் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
தமிழில் தனது முதல் சீரியலில் வில்லியாக நடித்த சைத்ரா ரெட்டி தற்போது கயல் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா சில சமயங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.