சினிமாவெள்ளித்திரை

பத்திரிகையாளராக மாறிய பிரபல நடிகை !

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தில் அதிதி சங்கர் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் படம்

‘டாக்டர்’, ‘டான்’ படங்களை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாவீரன்’. இப்படத்தை ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். மேலும், கதாநாயகியாக அதிதி சங்கர் நடிக்க, சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்தது. இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாவீரன் திரைப்படத்தில் நடிகை அதிதி சங்கர் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts