அரசியல்இந்தியா

என் நாட்டை இழக்க மாட்டேன் – ராகுல் காந்தி நம்பிக்கை !

டிவிட்டர் பதிவு

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3500 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். இதனிடயே இன்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தார். பின்னர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பிரிவினை அரசியல் மற்றும் வெறுப்பாலும் நான் என்னுடைய தந்தையை இழந்துவிட்டேன். ஆனால் ஒரு போதும் என் நாட்டை இழக்க மாட்டேன். வெறுப்பை அன்பால் வெல்லலாம். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தடைகளை வெல்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts