சுற்றுசூழல்தமிழ்நாடுவணிகம்

தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது !

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.

தங்கம் விலை

தங்கம் விலையில் கடந்த வாரம் முழுவதும் ஏற்றத்தாழ்வுடனே இருந்தது. கடந்த 31ம் தேதி அன்று ரூ.38,032-ஆக இருந்த 1 பவுன் தங்கத்தின் விலை கடந்த 1-ம் தேதி 1 பவுன் ரூ.37 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.38 ஆயிரமாக உயர்ந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று ஒரேநாளில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.440 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று காலை இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலையானது ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 560-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 695-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related posts