ஓடிடி ரிலீஸ்
இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில், உருவான திரைப்படம் ‘சீதா ராமம்’. இப்படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா மந்தனா, சுமந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்வப்னா சினிமா தயாரித்திருந்தது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ‘சீதா ராமம்’ திரைப்படம் வரும் 9-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
A tale of love and love letters that stands timeless 💌#SitaRamamOnPrime, Sept 9
@dulQuer @mrunal0801 @iamRashmika pic.twitter.com/bRo4fHs26m— prime video IN (@PrimeVideoIN) September 6, 2022