சினிமாவெள்ளித்திரை

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

புதிய அப்டேட்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலை மையமாக வைத்து தயாராகியுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அதன்பெயரில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

பிரபலங்களின் குரல் 

இந்நிலையில், இன்று 5 மொழிகளில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலருக்கு 5 மொழிகளை சேர்ந்த திரைபிரபலங்கள் குரல் கொடுத்துள்ளனர். அந்தவகையில் தமிழில் கமல்ஹாசன், இந்தியில் அனில்கபூர், தெலுங்கில் ராணா டகுபதி, மலையாளத்தில் பிரித்விராஜ் மற்றும் கன்னடத்தில் ஜெயந்த் கைக்கினி ஆகியோர் குரல் கொடுத்துள்ளதாக படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts