அரசியல்இந்தியாசமூகம்

ராகுல் காந்திக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு !

பாத யாத்திரையையொட்டி நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு வருகை தர உள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடு

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3500 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். ராகுல் காந்தி குமரி மாவட்டத்தில் மட்டுமே சுமார் 56 கிலோ மீட்டர் தூரம் 4 நாட்கள் பாதயாத்திரையாக செல்கிறார். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் டெல்லியில் இருந்து இன்று மாலை கன்னியாகுமரிக்கு வருகிறார்கள். கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை முக்கிய சந்திப்புகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ராகுல் காந்திக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மேலும், ராகுல் காந்தி பாத யாத்திரையாக செல்லும் போது 3 அடுக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

 

Related posts