தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் 9-ம் தேதி வரை மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சுற்றுப்பயணம்
சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9.15 மணியளவில் விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார். மேலும், அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி சென்று நாளை மாலை தொடங்கவுள்ள ராகுல் காந்தியின் பாதயாத்திரையின் துவக்க விழாவில் பங்கேற்கிறார். அதனை முடித்துக்கொண்டு நாளை இரவு திருநெல்வேலியில் தங்குகிறார். 8-ம் தேதி காலை திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குகிறார். அதனையடுத்து விருதுநகரில் மதிய உணவை முடித்துக்கொண்டு அப்படியே மதுரை செல்கிறார்.
பின்னர் 9-ம் தேதி காலை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் இல்லத் திருமணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைக்கிறார். அதன்பிறகு மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தை பார்வையிடுகிறார்.

