அரசியல்இந்தியாசமூகம்

நாளை தொடங்கும் பாதயாத்திரை : கன்னியாகுமரிக்கு படையெடுக்கும் காங்கிரஸ் தலைவர்கள்!

நாளை கன்னியாகுமரியில் தொடங்கவுள்ள ராகுல் காந்தியின் பாதயாத்திரையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

பாதயாத்திரை

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மிகப்பெரிய பாதயாத்திரையை மேற்கொள்கிறார். 3,500 கிலோ மீட்டர் தூரம் செல்லும் இந்த பாதயாத்திரை 150 நாட்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. நாளை மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தின் முன்பு தொடங்கும் இந்த பாதயாத்திரையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த தொடக்க விழாவில் பங்கேற்க இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கன்னியாகுமரிக்கு வந்தவண்ணம் இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கு உள்ள உணவகங்களின் விலையும், விடுதிகளின் வாடகையும் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

 

Related posts