சமூகம்தமிழ்நாடுவணிகம்

தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு : இன்றைய விலை நிலவரம் !

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.112 வரை அதிகரித்துள்ளது.

விலை நிலவரம்

கடந்த மாத இறுதியில் ரூ.38,032-ஆக இருந்த 1 பவுன் தங்கத்தின் விலை கடந்த 1-ம் தேதி அன்று ரூ.37,680-ஆக குறைந்தது. மேலும், கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. அதன்படி நேற்று 1 பவுன் தங்கம் ரூ.37,888-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.38 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

அதேபோல் நேற்று ரூ.4736-க்கு விற்பனை செய்யப்பட்ட 1 கிராம் தங்கத்தின் விலையானது இன்று கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4750-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related posts