தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கதில் உருவாகி வரும் ‘நானே வருவேன்’ படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
புதிய அப்டேட்
திருச்சிற்றம்பலம் படத்தை அடுத்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இந்துஜா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க, எல்லி அவுரம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் முதல் பாடல் நாளை மாலை 4.40 மணிக்கு வெளியாகும் என்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ஒரே ஒரு
ஊருக்குள்ளே,
இரண்டு ராஜா இருந்தாராம்..
ஒரு ராஜா நல்லவராம்,
இன்னொரு ராஜா கெட்டவராம் 🏹#Naanevaruven @selvaraghavan @theVcreations pic.twitter.com/fZCDa1OdN4— Dhanush (@dhanushkraja) September 5, 2022