காத்துவாக்குல ரெண்டு காதல்
விஜய்சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தை 7 Screen Studio நிறுவனம் Rowdy Pictures நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கதாப்பாத்திரங்கள்
முதலில் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், திரிஷா மற்றும் நயன்தாரா கதாநாயகிகளாகவும் நடிப்பதாக படக்குழு திட்டமிட்டிருந்தது. சில காரணத்தால் திரிஷா இந்த படத்தில் இருந்து வெளியேறினார்.
பின்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘நானும் ரவுடி தான்’ மற்றும் ‘இமைக்கா நொடிகள்’ என வெற்றி படங்களை தந்த விஜய்சேதுபதி நயன்தாரா கூட்டணியே மீண்டும் நம்பி களமிறங்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.
பின்பு திரிஷா-க்கு பதிலாக சமந்தாவும் படக்குழுவுடன் இணைந்தார். முன்னனி நடிகர் பிரபு , கிரிக்கெட் வீரர் எஸ்.ஸ்ரீஷாந்த், ரெடின் கிங்ஸ்லி, நடன இயக்குனர் கலா மாஸ்டர் மற்றும் லொள்ளுசபா மாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இருப்பதாக படக்குழு அறிவித்தது.
மூன்று கட்ட படப்பிடிப்பு
முதல் கட்ட படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி தொடங்கி ஒரு மாதத்தில் படக்குழு திட்டமிட்டபடி முடிவடைந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் 10-ம் தேதி முடிந்தது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி கொரோனா பரவலின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாண்டிச்சேரி-யில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கப்பட்டது.
90 சதவிகித படப்பிடிப்பு முடிந்ததும் படத்தின் Post Production வேலையை ஆரம்பித்தது படக்குழு. டிசம்பர் 2021-யில் Dubbing வேலைகள் தொடங்கப்பட்டன. இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7-ம் தேதி தொடங்கி இந்த வருடம் மார்ச் மாதம் 31-ம் தேதி மைசூரில் முடிவடைந்தது.
பாடல் ஹிட்
இந்த படத்தில் வெளியான முதல் பாடலான ‘two two two’ என்ற பாடல் மிக பெரிய ஹிட் அடித்தது. இப்பாடலை இயக்குனர் விக்னேஷ் எழுதியுள்ளார். அனிருத், சக்திஸ்ரீ கோபாலன், ஐஸ்வர்யா சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர் மேலும், இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலரும் மில்லியன்ஸ்களை தாண்டியது. முக்கோண காதலை மையப்படுத்திய கதையாக இருக்கோமோ என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்போடு இருக்கிறார்கள்.
வெளியீடு
இப்படத்தை 28.04.2021 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. Post Production காரணமாக தாமதம் ஏற்பட்டது. தெலுங்கு Dubbing Tittle ‘கண்மணி ராம்போ கதிஜா’ என ஒரே நேரத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டனர்.
பல தடைகளை கடந்து இத்திரைப்படம் நடிகை சமந்தா-வின் பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிட்டார்கள். அத்திட்டத்தின்படி 28.04.2022 அன்று இத்திரைப்படம் வெளியாகிறது.
இத்திரைப்படம் பார்வையார்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.