இந்தி ரீமேக்
தமிழில் மாநகரம், மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கைதி’. நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இப்படம் ஹிந்தி மொழியில் ‘போலோ’ என்ற பெயரில் உருவாகி வந்தது. கார்த்தி கதாபாத்திரத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க, நரேன் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கிறார்.
மேலும், இப்படத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில், ‘போலோ’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
Kaun hai woh… jisko pata hai, woh khud laapata hai#BholaaTeaserOutNow #BholaaIn3D@ajaydevgn #Tabu @ADFFilms #BhushanKumar #KrishanKumar @prabhu_sr @KumarMangat
— ADFFilms (@ADFFilms) November 22, 2022