தரிசன நேரம்
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 17-ம் தேதி முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வர தொடங்கினர். இந்த 7 நாட்களில் மட்டுமே 4 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆன்லைன் முன்பதிவு மூலமாக தரிசனம் செய்துள்ளனர். மேலும், நாளுக்கு நாள் சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் 10 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இதனை கருத்தில் கொண்டு நேற்று முதல் சபரிமலையில் மாலை தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாலை மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு வந்த கோவில் நடை, ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

