இளைஞரணி செயலாளர்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், பிரபல நடிகருமான உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை சில ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தது. இதனைத்தொடர்ந்து பல மாவட்டங்களில் தீர்மானங்களும் நிறைவேற்றபட்டது. அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கபட்டார். இதனையடுத்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிக்கிறார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக இரண்டாவது முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.