செயலாளர்கள் கூட்டம்
தி.மு.க.வில் பொதுச்செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து வந்தவர் க.அன்பழகன். பேராசிரியர் என்று அன்போடு அழைக்கப்பட்ட இவருக்கு வருகிற டிசம்பர் 19-ம் தேதி பிறந்த நாள். இது நூற்றாண்டு நிறைவு பிறந்தநாள் என்பதால் தி.மு.க சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இது குறித்து ஆலோசனை நடத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அறிக்கை
‘தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற டிசம்பர் 1-ம் தேதி காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

