ஆன்மீகம்சமூகம்

திருப்பதியில் மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் நாளை வெளியீடு!

திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாற்றுத்திறனாளிகள், மூத்தகுடிமக்கள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கோயிலின் அருகே உள்ள சிறப்பு வாயில் வழியாக அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச தரிசன டிக்கெட் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிறப்பு தரிசனம் 

அதில், ‘முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமியை தரிசிக்க டிசம்பர் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணியளவில் வெளியிடப்படுகிறது’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts