வாரிசு படம்
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே பொங்கல் பண்டிகைக்கு நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஐதராபாத்தில் நடைபெற்ற தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தயாரிப்பாளர் சங்கம்
இதற்கு தமிழ் திரையுலகில் இருந்து பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்நிலையில், வாரிசு திரைப்படம் திட்டமிட்டபடி தெலுங்கில் வெளியாகும் என்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.

