சினிமா

திருமண பந்தத்திற்குள் நுழைந்தார்கள் நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி!

சமீப காலமாகவே காதலித்து வந்த நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி நேற்று சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகர் ஆதி

2006ம் ஆண்டு ‘ஒக்க வி சிற்றம்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஆதி. அதனைத்தொடர்ந்து அவர் 2007ம் ஆண்டு வெளியான மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். அதன்பிறகு 2009ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் ஈரம் படத்தில் நடித்தார். மேலும், ஆதி அய்யனார், ஆடு புலி , அரவான், மறந்தேன் மன்னித்தேன், வல்லினம், கோச்சடையான் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

Aadhi Pinisetty & Nikki Galrani Engagement Video | Aadhi weds Nikki | Manastars - YouTube

நிக்கி கல்ராணி

2014ம் ஆண்டு ‘1983’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. அதன்பிறகு ஜி. வி. பிரகாஷ் குமார் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
மேலும், கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்திருந்தார்.

நட்பு முதல் காதல் வரை

அதனைதொடர்ந்து யாகாவாராயினும் நா காக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவரும் இணைந்து நடித்தனர். ஆரம்ப காலத்தில் நல்ல நண்பர்களாக பழகி வந்தனர். கடந்த சில வருடங்களாக இருவரும் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Aadhi Pinisetty and Nikki Galrani Are Married; Check Out Pics from Their Traditional Wedding! | 🎥 LatestLY

திருமணம் வைபோகம்

மேலும், அதை உறுதி செய்யும் வகையில் இருவரும் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று ஆதி, நிக்கி கல்ராணி இருவருக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

மற்றும் இந்த திருமண நிகழ்ச்சியில் நானி, ஆர்யா, சாயிஷா, நடிகர் சுந்தீப் கிஷன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், திருமணம் உறவினர்கள், நண்பர்கள் என மிக எளிமையாக நடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என்று அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Related posts