சைதாப்பேட்டையில் உள்ள நடைபாதை வியாபாரிகள் 700 பேருக்கு மெகா குடையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை, சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு மெகா குடை மற்றும் பண உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நெடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்நிலையில், நடைபாதை வியாபாரிகள் 700 பேருக்கு 1,300 ரூபாய் மதிப்புள்ள மெகா குடை மற்றும் தலா 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கினார். இதில், நடிகர் யோகிபாபு, மண்டல குழு தலைவர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ், அவைத் தலைவர் எஸ்.குணசேகரன், கவுன்சிலர்கள் எம்.ஸ்ரீதரன், தா.மோகன்குமார், ப.சுப்பிரமணி, எஸ்.பி.கோதண்டம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

