சென்னை தீவுத் திடலில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் புதிதாக பீப் பிரியாணிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பீப் பிரியாணி
தமிழக உணவு பாதுகாப்பு துறை சார்பில், உணவு திருவிழா சென்னை தீவுத்திடலில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மாக்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்கள். உணவுப் பாதுகாப்பில் விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் இந்த உணவு திருவிழாவை நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இந்த விழாவில் பிரியாணி, மீன் உணவுகள், நெல்லை இருட்டுக்கடை அல்வா போன்றவையும் கிடைக்கிறது.
இந்நிலையில், உணவு திருவிழாவில் புதிதாக பீப் பிரியாணிக்கும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அங்கு 3 கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

