சினிமாவெள்ளித்திரை

வைரலாகும் நயன்தாரா பட வீடியோ பாடல்!

வீடியோ பாடல்

‘நேரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். மலையாளத்தில் இவர் இயக்கிய ‘பிரேமம்’ படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனையடுத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோல்டு’. இதில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ‘கோல்டு’ படத்தின் ‘தன்னே.. தன்னே’ எனும் வீடியோ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts