சினிமாவெள்ளித்திரை

வேகமாக பரவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படங்கள்!

புகைப்படங்கள்

தனுஷ் நடித்த ‘3’, கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களை இயக்கியதின் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதனைத்தொடர்ந்து பயணி என்ற இசை ஆல்பம் ஒன்றை இயக்கினார். இவர் அடுத்ததாக ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் நடிகர் ரஜினியை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ‘இரண்டு அற்புதமான மனிதர்களின் சந்திப்பிற்கு காரணமாக இருப்பது ஆசிர்வாதம்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related posts