சினிமாவெள்ளித்திரை

நாளை வெளியாகும் விஜய் சேதுபதி படம் : ரசிகர்கள் ஆர்வம்!

விஜய் சேதுபதி படம்

விஜய் சேதுபதியின் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். ‘டிஎஸ்பி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை அனு கீர்த்திவாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேயாத மான், பபூன், 777 சார்லி படங்களை தயாரித்த ஸ்டோன் பென்ச் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில், ‘டிஎஸ்பி’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகும் விஜய் சேதுபதி படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

Related posts