ட்ரெண்டாகும் புகைப்படம்
நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கி வரும் திரைப்படம் ‘துணிவு’. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியது. இதனிடையே சமீபத்தில் அஜித்தின் புதிய கெட்டப் புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டானது.
இந்நிலையில், நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

