சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மக்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடிகளை பறக்கவிட்டுள்ளனர். கொண்டாட்டங்களை சீர் குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் ஊடுருவ கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதன்பெயரில், சென்னையில் அரசு சார்பில் சுதந்திர தின விழா நடைபெறும், ராஜாஜி சாலை கடந்த 6-ம் தேதி முதல் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் அங்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

