முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநில இளைஞர் விருது
சமூக முன்னேற்றத்திற்க்காக சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு வருடங்களில் சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2022ம் ஆண்டிற்கான ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’ சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. சமூக வளர்ச்சிக்கு சேவையாற்றிய வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார், ஸ்ரீகாந்த் மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முகமது ஆஷிக் ஆகியோர் விருது வழங்கப்படவுள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவரஞ்சனியும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பல மாநிலங்களுக்கு சென்று 1250 நெல் ரகங்களை மீட்டு எடுத்தவர். முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு தேர்வாகியுள்ள இவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதும், 1 லட்சம் ரூபாய் பரிசு தொகையும், பாராட்டு பத்திரமும் வழங்கி சிறப்பிக்கயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.