கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டம்
இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து மத்திய உளவுத்துறை எச்சரிக்கையின் படி தமிழகம் முழவதும் லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் அரசு சார்பில் சுதந்திர தின விழா நடைபெறும் ராஜாஜி சாலையில் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
திருவள்ளுவர் சிலை
இந்நிலையில், அதேபோல் சர்வதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரியிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

