நடிகர் ரஜினிகாந்த், ஆளுநரை சந்தித்து அரசியல் பேசியதில் தவறில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஆளுநர் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8ம் தேதி திடீரென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி, ஆளுநரிடம் அரசியல் பேசியதாக கூறினார். மேலும், அது குறித்து வெளியில் கூற இயலாது என்றும் கூறினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ரஜினி, பாஜகவுடன் தொடர்புபடுத்தியும் பேசப்பட்டார். இந்நிலையில், 75-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னையை, நீலாங்கரை கடலில் தேசியக் கொடிப் பேரணியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தொடங்கி வைத்தார்.
அண்ணாமலை பேச்சு
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசியதில் தவறு எதுவும் இல்லை. சில அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இருப்பை காட்டுவதற்காக ரஜினியை விமர்சிக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

