அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று மாலை பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
பொதுக்கூட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அன்புமணி ராமதாஸ் சந்தித்து வருகிறார். அந்த வகையில், பா.ம.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இன்று ஈரோடு மாவட்டத்துக்கு செல்கிறார். அங்கு நிர்வாகிகளை சந்தித்து ஆலோசன நடத்துகிறார். இதனையடுத்து இன்று மாலை 5 மணிக்கு பவானி வி.என்.சி. கார்னர் தேர்வீதி பகுதியில் நடைபெறவிருக்கும் பா.ம.க. பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கிறார்.
மேலும், இந்த கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

