சினிமாவெள்ளித்திரை

வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் பட ட்ரைலர்!

வைரலாகும் ட்ரைலர்

இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில், கடந்த 2021-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் ஆர். கண்ணன் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, ராகுல் ரவீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts