ரிலீஸ் தேதி
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, ஏ1, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா ஆகிய படங்களை அடுத்து நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’. தெலுங்கில் கடந்த 2019-ம் ஆண்டு ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இப்படத்தை மனோஜ் பீதா இயக்கியுள்ளார். இதில் ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஸ்காந்த் ஆகியோர் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில், ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Happy to Announce that My Next flick #AgentKannayiram will be hitting the screen from Nov 25th ! #AgentKannayiramFromNov25
Dir by @manojbeedha_dir
A @thisisysr Musical @IRiyaSuman @VijaytvpugazhO @DoneChannel1 @thinkmusicindia pic.twitter.com/TfpXQWRRuU— Santhanam (@iamsanthanam) October 26, 2022