சினிமாவெள்ளித்திரை

கவனம் ஈர்க்கும் ஹன்சிகா பட போஸ்டர்!

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

2010ம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வந்த இவர் பட வாய்ப்புகள் குறைந்ததால் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின்னர் சமீபத்தில் வெளியான ‘மஹா’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இயக்குனர் சபரி – குரு சரவணன் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஹன்சிகா நடித்துள்ளார்.

இந்நிலையில், ‘கார்டியன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Related posts