சமூகம்சினிமா

பிரபல நடிகையின் அண்ணன் காலமானார்!

பிரபல நடிகை

1988-ம் ஆண்டு வெளியான ‘தர்மத்தின் தலைவன்’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை குஷ்பு. 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த இவர் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே தனது மூத்த சகோதரர் அபுபக்கர் உயிருக்குப் போராடி வருவதாகவும், அவருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் எனவும் குஷ்பு கேட்டுக்கொண்டார்.

இறப்பு

இந்நிலையில், நடிகை குஷ்புவின் மூத்த சகோதரர் அபுபக்கர் இன்று உயிரிழந்துள்ளார். இதனை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது. அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் எங்களோடு இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.

இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Related posts