ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர் தனுஷ் நடிப்பில், 2012-ம் ஆண்டு வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதனைத்தொடர்ந்து கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘வை ராஜா வை’ படத்தை இயக்கினார். இதனையடுத்து ‘பயணி’ என்ற பாடல் ஆல்பம் ஒன்றை இயக்கியிருந்தார். இந்த ஆல்பம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
புதிய படம்
இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ என்ற புதிய படத்தை இயக்கவுள்ளார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும், நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
#LalSalaam 🫡 to everyone out there!
We are extremely delighted to announce our next project, with the one & only Superstar 🌟 @rajinikanth in a special appearance!
Directed by @ash_rajinikanth 🎬
Starring @TheVishnuVishal & @vikranth_offl in the leads 🏏
Music by @arrahman 🎶 pic.twitter.com/aYlxiXHodZ— Lyca Productions (@LycaProductions) November 5, 2022

